அதிமுக கோட்டையை தகர்த்து... 30ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்த திமுக -
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், ஒட்டப்பிடாரம், ஆண்டிப்பட்டி உட்பட 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இதில், 30 ஆண்டுகளாக அதிமுக-வின் கோட்டையாக திகழ்ந்து வரும் ஒட்டப்பிடாரத்தில் திமுக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் 1989-ல் திமுக வேட்பாளர் முத்தையா வெற்றி பெற்றார். அதனை அடுத்து 6 முறை நடந்த தேர்தலில் நான்கு முறை அதிமுக-வும், இரண்டு முறை புதிய தமிழகம் கட்சியும் வெற்றி பெற்றது.
அதன்பிறகு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஒட்டப்பிடராம் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா 19,657 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதே சமயம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதயில் 19 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட மகாராஜன் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக கோட்டையை தகர்த்து... 30ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்த திமுக -
Reviewed by Author
on
May 25, 2019
Rating:

No comments:
Post a Comment