விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் ஒரு தெளிவிருந்தது! அமைச்சர் ஹக்கீம் -
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.
எனினும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள்.
இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் ஒரு தெளிவிருந்தது! அமைச்சர் ஹக்கீம் -
Reviewed by Author
on
May 25, 2019
Rating:

No comments:
Post a Comment