அண்மைய செய்திகள்

recent
-

பாகிஸ்தானில் 400 ஆண்டுகள் பழமையான குருநானக் அரண்மனை இடிப்பு: மத விவகாரத்துறை உடந்தையா?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 400 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க குருநானக் அரண்மனையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதாகவும் இதற்கு அந்நாட்டு மத விவகாரத்துறை உடந்தை என்ற கோணத்திலும் அந்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூர். இதன் அருகேயுள்ள நரோவால் நகரில் 4 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பாபா குருநானக் அரண்மனை உள்ளது. நான்கு மாடிகளைக் கொண்ட இந்த அரண்மனை ஏற்கனவே  சிதிலமடைந்துள்ளது. இதில் உள்ள 16 அறைகளிலும் பூ வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகள், ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் சீக்கியர்கள் இங்கு வருகை புரிவதுண்டு.

இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விலை மதிக்கத்தக்க கதவுகள், ஜன்னல்கள் விற்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத விவகாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும்  நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அத்துறையினரின் உடந்தையுடனே இச்சம்பவம் நடந்திருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த அரண்மனையின் உரிமையாளர் யார் என தெரியவில்லை. இதுகுறித்து நரோவால் நகர துணை ஆணையர் வாகீத் அஸ்கார் கூறுகையில், ``வருவாய் பதிவுத் துறையில் அரண்மனை பற்றிய ஆவணங்கள் இல்லை.இது வரலாற்று தொடர்புடையதாக கருதப்படுவதால் நகராட்சி ஆவணங்களில் பதிவாகி  உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்’’ என்று கூறினார்.

பாகிஸ்தானில் 400 ஆண்டுகள் பழமையான குருநானக் அரண்மனை இடிப்பு: மத விவகாரத்துறை உடந்தையா? Reviewed by Author on May 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.