அண்மைய செய்திகள்

recent
-

ஆசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் பத்தாவது இடத்திற்கு அமைச்சர் ரிசாத் பதியூதீன் உள்ளார்..!!


ஆசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் பத்தாவது இடத்திற்கு அமைச்சர் ரிசாத் பதியூதீன் வந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் நந்தன தேரர் தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சு பதவியை தவறாக பயன்படுத்தி பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பயங்கரவாத குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி பாரிய சொத்துக்களை பெற்றுள்ளதாக தேரர் குற்றம் சாட்டினார்.

சாதாரண பை ஒன்றில் ஆடை எடுத்து கொண்டு கொழும்பு வந்த ரிசாத் பதியூதின், மிகப் பெரிய பணக்காரனாக மாறியது எப்படி? இது தொடர்பில் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என தேரர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராகுவதற்காக சென்ற போது ஊடகவியலாளர்களிடம் தேசிய அமைப்பாளர் நந்தன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் பத்தாவது இடத்திற்கு அமைச்சர் ரிசாத் பதியூதீன் உள்ளார்..!! Reviewed by Author on May 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.