சற்று முன்னர் பொலிஸார்-மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் -பொலிஸ் அதிகாரி பலி -
தென்னிலங்கையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அக்குரஸ்ஸ - உருமுத்தையில் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோத மதுபான உற்பத்தி சுற்றிவளைக்க சென்ற போது எதிர் தரப்பினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
சற்று முன்னர் பொலிஸார்-மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் -பொலிஸ் அதிகாரி பலி -
Reviewed by Author
on
May 22, 2019
Rating:

No comments:
Post a Comment