இலங்கை அணி அசத்தல் வெற்றி.....
உலகக்கிண்ணம் தொடருக்கான 7 வது போட்டியானது ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெற்றது.
கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது. 33 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டதால், போட்டி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
ஆனால் 36.5 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இலங்கை அணி 201 ரன்கள் மட்டுமே குவித்தது.

அணியில் அதிகபட்சமாக குசால் பெரேரா 78 ரன்கள் எடுத்திருந்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகம்மது நபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

டக்வோர்த் லுயிஸ் முறையில் 187(41) ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் சோபிக்க தவறியதால், 32.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது.

இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். மலிங்கா 3 விக்கெட்டுகளும், உடானா, திசாரா பெரேரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்
இலங்கை அணி அசத்தல் வெற்றி.....
Reviewed by Author
on
June 05, 2019
Rating:
No comments:
Post a Comment