மன்னார் தழ்வுபாடு கடற்கரையில் 1011.3kg பீடி சுற்றும் இலைகள் கொண்ட பொதிகள் கடற்படையினரால் மீட்பு-படம்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 04-06-2019அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது 33 பொதிகளைக் கொண்ட 1011.3 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர்.
-தாழ்வுபாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையிலே குறித்த பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
-இதன் போது தோட்டவெளி மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பீடி இலைப் பொதிகளும் யாழ். சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரனைகளை யாழ். சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-தாழ்வுபாட்டு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையிலே குறித்த பீடி சுற்றும் இலைகளைக் கொண்ட பொதிகள் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
-இதன் போது தோட்டவெளி மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பீடி இலைப் பொதிகளும் யாழ். சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரனைகளை யாழ். சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தழ்வுபாடு கடற்கரையில் 1011.3kg பீடி சுற்றும் இலைகள் கொண்ட பொதிகள் கடற்படையினரால் மீட்பு-படம்
Reviewed by Author
on
June 04, 2019
Rating:

No comments:
Post a Comment