தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்! ஆர்.பிரபாகரன் -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அக்கட்சியில் உள்ளவர்களின் உழைப்பல்ல, பலரின் உயிர்த்தியாகத்தினால் உருவாக்கப்பட்டதாகும். உன்னதமான செயற்பாட்டின் மூலமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.
ஆனால் அக்கட்சியினால் தமிழ் மக்களுக்கு இதுவரையில் எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. தமிழ் மக்கள் அக்கட்சியினை நிராகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொளிதான் அண்மையில் கல்முனையில் சுமந்திரனால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவமாகும்.
இது கவலைக்குரிய விடயமாகு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லமாகும்.
விடுதலைப்புலிகள் இயக்கம் அழியப்போகின்றது என விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்க்க தரிசனத்தினால் உணர்ந்ததன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கி மக்களுக்கான ஜனநாயக சக்தியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கட்சியில் உள்ளவர்களின் உழைப்பல்ல, பலரின் உயிர்த்தியாகத்தினால், விலைமதிப்பற்ற விடுதலை போராட்டத்தினால் உருவாக்கப்பட்டதாகும். ஆனால் அக்கட்சியினால் தமிழ் மக்களுக்கு இதுவரையில் எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான பத்தம்ச கோரிக்கைகளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துதல், சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைசெய்தல் என்பனவும் உள்ளது.
இன்று மூன்று வருடங்கள் பத்து மாதங்களை கடந்துள்ள போதிலும் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவும் இல்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவும் இல்லை. சம்பந்தர் இன்னும் மூன்று மாதகால அவகாசம் கோரியுள்ளார்.
தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட பத்து அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையினை நிறைவேற்ற நான்கு வருடங்கள் தேவையென்று சொன்னால் பத்து கோரிக்கைளையும் நிறைவேற்ற நாற்பது வருங்கள் தேவையாகும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினை இன்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கு சில இஸ்லாமிய அடிவருடிகள்தான் தடையாக இருக்கின்றது.
அவர்களே அரசாங்கத்தினை கொண்டு தடைசெய்து வருகின்றனர். வாதிடுவதற்கான அனைத்து அதிகாரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராமுகமாக இருக்கின்றது.
முஸ்லிம் பிரதேசங்களுக்கு தேவையான நிர்வாக அலகுகளை வழங்கும்போது தமிழ் மக்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் அனைத்து இனமக்களும் ஒன்றாக வாழவே விரும்புகின்றோம்.
ஈழ விடுதலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்களின் விடுதலை போராட்டம் தனியாக தமிழர்களுக்கான போராட்டமாக மட்டும் ஆரம்பிக்கவில்லை.
வடக்கு, கிழக்கு மலையம் ஆகியனவற்றைக்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலைப்போராட்டமாகவ முன்னெடுக்கப்பட்டுவந்தது. இதனை முஸ்லிம் மக்கள் கருத்தில்கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் இருந்து ஒதுங்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சொத்துகளான 16 நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாது.
தமிழ் மக்களின் தேவையினை நோக்காக கொண்டுசெயற்படும் கட்சிகளிடம் குறித்த 16 நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பாரப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளீர்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்! ஆர்.பிரபாகரன் -
Reviewed by Author
on
June 25, 2019
Rating:

No comments:
Post a Comment