உலகக்கோப்பையில் இலங்கைக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி
கடந்த மே மாதம் 30-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை தொடர் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து அணிகளும், இந்தியாவைத் தவிர 6 போட்டிகளில் விளையாடிவிட்டன.
இதில் இலங்கை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றி 2-ல் தோல்வி, இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது என மொத்தம் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.

இன்னும் இலங்கை அணிக்கு 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இந்தியாவுடன் உள்ளன. இந்த மூன்று போட்டிகளில் இலங்கை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இதில் மூன்றிலும் வெற்றி பெற்றுவிட்டால் இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதே சமயம் ஒன்றில் தோல்வியடைந்துவிட்டால் 10 புள்ளிகளுடன் இருக்கும்.
அப்போது இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்க வேண்டும், வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளுக்கு மேல் ஜெயிக்க கூடாது, பாகிஸ்தான் மீதம் விளையாடும் போட்டிகளில் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும்.
இது நடந்தால் மட்டுமே இலங்கை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
உலகக்கோப்பையில் இலங்கைக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி
Reviewed by Author
on
June 25, 2019
Rating:
No comments:
Post a Comment