492 இலங்கை தமிழ் அகதிகளை கனடாவுக்கு சுமந்து வந்த கப்பலுக்கு என்ன நேரிடப்போகிறது தெரியுமா? -
ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
2010ஆம் ஆண்டு, இலங்கை யுத்தத்திற்கு தப்பி நாட்டை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான தமிழர்களை சுமந்து கொண்டு அந்த கப்பல் கனடாவின் வான்கூவர் தீவை அடைந்தது.
அந்த கப்பல் பல ஆண்டுகளாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அந்த கப்பலில் வந்த 492 தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்வது குறித்து கனேடிய மக்களுக்குள் தேசிய அளவில் வாதங்கள் நடத்தப்பட்டன.

அந்த கப்பலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில், அது பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சியின் சொத்தாக மாறியது.
52 மீற்றர் நீளமுடைய அந்த கப்பலை வாங்க யாரும் முன்வராததால், அதை உடைப்பதென கனடா அரசு முடிவு செய்தது.
ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு தாமதமாகிக் கொண்டே வந்தது.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அந்த கப்பலில் ஆஸ்பஸ்டாஸ் பாதரசம் உட்பட பல நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வொன்று கண்டறிந்தது.
அத்துடன் அந்த கப்பலை பராமரித்து பாதுகாப்பதற்காக ஒட்டாவாவுக்கு சுமார் 970,000 டொலர்கள் செலவு பிடித்தது.
இந்நிலையில், ஜூலை மாதம் 12ஆம் திகதி ஃபெடரல் அரசு அந்த கப்பலை உடைப்பதற்காக 4,151,070.39 டொலர்கள் ஒதுக்கியது.
அந்த கப்பல் கனேடிய சட்டங்களுக்குட்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லா முறையில் உடைக்கப்படலாம், மொத்தமாக ஒதுக்கப்படலாம் அல்லது மறு சுழற்சிக்குள்ளாக்கப்படலாம்.
எதுவானாலும் 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் அது நிறைவேற்றப்பட உள்ளது.
492 இலங்கை தமிழ் அகதிகளை கனடாவுக்கு சுமந்து வந்த கப்பலுக்கு என்ன நேரிடப்போகிறது தெரியுமா? -
Reviewed by Author
on
July 23, 2019
Rating:
No comments:
Post a Comment