மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்-படங்கள்
மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை 28072019 காலை 9.30மணியளவில் பிரம்மஸ்ரீ மனோ.ஐங்கரசர்மா தலைமையில் மிகச் சிறப்பான முறையில் ,இடம்பெற்றது 80 அடி நீளமான அறநெறிப் பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநதி சிவமோகன் அவர்கள் 10 லட்சம் ரூபாவும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி அம்மா அவர்கள் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த அறநெறிப் பாடசாலைக்கான கட்டிட அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட இந்து மகாசபையின் தலைவர் திருவாளர் இராமகிருஷ்ணன் அவர்களும் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் கதிர்காமநாதன் ஐயா அவர்களும் மற்றும் மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகள் இணையத்தின் தலைவர் சிவ ஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் அவர்களும் திருவாளர் ம.நடேசானந்தன் அவர்களும் மற்றும் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர்களான திரு யோகனாதன் திரு மகேந்திரன் திரு ஜெயக்குமார் மற்றும் பல இந்து சமய முக்கிய பிரமுகர்களும் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தனர்.
குறிப்பாக் அறநெறிப்பிள்ளைகளும் அடிக்கல்லினை எடுத்து வைத்தமை சிறப்பாக இருந்தது.


மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்-படங்கள்
Reviewed by Author
on
July 30, 2019
Rating:

No comments:
Post a Comment