மாகாண ரீதியில் சாதனை புரிந்த மன்-கற்கிடந்தகுளம் றோ.க த.க பாடசாலை மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு-
2019 ஆண்டுக்காக மாகாண ரீதியில் இடம் பெற்ற விளையாட்டு விழாவில் வடமாகாண ரீதியில் சாதனை புரிந்த மன் கற்கிடந்தகுளம் றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பாடசாலை அதிபர் திரு. பிரான்ஸிஸ் தலைமையில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் பிந்தங்கிய கிராமங்களில் ஒன்றான குறித்த கிராமம் ஒவ்வொரு வருடமும் விளையாட்டுதுறையில் சாதனை படைத்துவருகின்றது.
இந்த நிலையில் கடந்த வாரங்களில் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம் பெற்ற விளையாட்டு நிகழ்வில் 16 வயது மற்றும் 14 வயது தனிப்பிரிவிலும் 12 வயது குழு பிரிவிலும் மாகாணரீதியாக சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டதுடன் ஒட்டு மொத்தமாக மாகாணரீதியில் 92 புள்ளிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
குறித்த சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.பிறட்லி அருட்தந்தை சுரேந்திரன் ரேவல் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்வி பணிப்பாளர் உதவி உடற்கல்வி பணிப்பாளர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர்கள் மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் கடந்த 2018 வருடம் மாகாண ரீதியில் இடம் பெற்ற போட்டிகளில் பங்குபற்றிய குறித்த பாடசாலை 42 புள்ளிகளை மாத்திரமே பெற்று கொண்ட நிலையில் இவ்வருடம் 92 புள்ளிகளை பெற்றும் மன்னார் மாவட்ட ரீதியில் இரண்டம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் மாகண ரீதியில் அதிக சம்பியன்களையும் பெற்றுகொண்டது.
இருப்பினும் குறித்த பாடசாலையில் இதுவரை மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஒழுங்கான மைதானமோ ஒழுங்கான விளையாட்டு உபகரணக்களோ இல்லாமல் இருந்த போதும் குறித்த மாணவ மாணவிகள் தொடர்சியாக திறமையை வெளிப்படுத்தி மாகாணா ரீதியில் வெற்றிகளை பெற்றுவருகின்றமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
July 29, 2019
Rating:

No comments:
Post a Comment