மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்குப்பின் பிறந்த குழந்தை:
செக் குடியரசிலுள்ள ஒரு மருத்துவமனையில் அந்த பெண் செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த பெண் கர்ப்பமுற்று 34 வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

27 வயதான அந்த குழந்தையின் தாய், பிரசவத்திற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில், ஜூன் மாத துவக்கத்தில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
என்றாலும் அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக, மருத்துவர்கள் அவரை செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் உயிருடன் வைத்திருந்தனர்.
இதேபோல் முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனையான Catarina Sequeira, மூளைச்சாவு அடைந்தபின், மூன்று மாதங்களுக்குப்பிறகு தனது மகன் Salvadorஐ பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.



மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மூன்று மாதங்களுக்குப்பின் பிறந்த குழந்தை:
Reviewed by Author
on
August 29, 2019
Rating:
No comments:
Post a Comment