தமிழினம் அனுபவித்த வலிகளுக்கு நீதிகேட்டு ஜெனிவா நோக்கிய பயணம் -
தமிழ் இனம் நொந்து,வெந்து தொடர்ச்சியாக அனுபவித்த வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த பல வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம் பெயர் வாழ் தமிழீழ தாயக மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக ஜெனிவா நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களினால் ஏற்பாடு செய்யப்படும் இப்போராட்டம் மூலம் தமிழ் இனம் பட்ட துன்ப துயரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் கதவுகளை இறுக தட்டி நிரந்தரமானதும், நிம்மதியானதுமான தீர்வை பெற்று தாயக கனவை நனவாக்க எடுக்கும் போராட்ட வடிவத்தில் இதுவும் ஒன்றாகும்.
அதனடிப்படையில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது நீங்காத நினைவு நாட்களில் பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக பேரினவாத அரசினால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழ் இனபடுகொலைகளின் சாட்சியங்கள் அடங்கிய நிழற்படக் கண்காட்சியும், ஈருருளி மூலமும், கால்நடையாகவும் ஜெனிவா நோக்கிய பயணம் ஆரம்பிக்கபட்டுள்ளது.
குறித்த பயணம் 15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கத்தில் (முருகதாசன் திடலில்) நிறைவடையவுள்ளது.
இப்போராட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரான்ஸ் நாட்டின் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியன ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழினம் அனுபவித்த வலிகளுக்கு நீதிகேட்டு ஜெனிவா நோக்கிய பயணம் -
Reviewed by Author
on
August 29, 2019
Rating:

No comments:
Post a Comment