இந்தியாவின் முதலாவது பௌத்த மாநிலம் உருவாகிவிட்டது! பிரதமர் ரணில் -
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டிருப்பது அவர்களது உள்நாட்டு விவகாரம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்வதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
அதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான யோசனைக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
மத்திய அரசின் இந்த நகர்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரம், இந்திய எல்லையைக் கடந்தும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
“ இறுதியாக லடாக் யூனியன் பிரதேசமாக உருவாகியுள்ளது. 70 வீதம் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் வாழும் முதல் இந்திய மாநிலமாக இது உருவாகியுள்ளது.
லடாக், யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நான், லடாக்கிற்கு சென்றுள்ளேன். சுற்றுலா செல்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்த பகுதி அது” என கூறியுள்ளார்.
இந்தியாவின் முதலாவது பௌத்த மாநிலம் உருவாகிவிட்டது! பிரதமர் ரணில் -
Reviewed by Author
on
August 07, 2019
Rating:

No comments:
Post a Comment