கூட்டமைப்புடனான முக்கிய சந்திப்பு! இடைநடுவில் வெளியேறிய மைத்திரி -
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநடுவில் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்களின் பல முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்திருந்தது.
இந்த சந்திப்பு இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்த போதிலும், காலை 11.20 மணிக்கே கூட்டம் ஆரம்பித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சித்தார்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன், யோகேஸ்வரன், சிறிநேசன், சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளாமை ஜனாதிபதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்றி முடிவடைந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநடுவில் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டமைப்புடனான முக்கிய சந்திப்பு! இடைநடுவில் வெளியேறிய மைத்திரி -
Reviewed by Author
on
August 29, 2019
Rating:

No comments:
Post a Comment