மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்திய வியாழேந்திரன் எம்.பியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு -
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட 5 பேர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பிரதேசத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வியாழேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவரின் உடல் பாகங்களை மட்டக்களப்பு, கல்வியங்காடு இந்து மயானத்தில் புதைத்தமையினால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக புதைத்த உடற்பாகத்தை அகற்றுமாறு கோரி பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் பலரும் காயங்களுக்கு உள்ளாகினர். போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்திய வியாழேந்திரன் எம்.பியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு -
Reviewed by Author
on
August 29, 2019
Rating:

No comments:
Post a Comment