நீதிமன்ற உத்தரவை அவமதித்து நீராவியடியில் மீண்டும் பௌத்த பேரினவாதம் -பிள்ளையாரின் தீர்த்தக்கேணி அருகில் தேரரின் உடல் தகனம்
முல்லைத்தீவு, செம்மலை - நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று நண்பகல் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி தமிழ் மக்களைப் பொலிஸார் தடுக்க நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகாமையில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் கொழும்பில் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வளாகத்தில் தகனம் செய்ய பௌத்த தேரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக, நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வரை சடலத்தைப் புதைக்கவோ தகனம் செய்யவோ கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிடிருந்தது.
இன்று காலை இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் சார்பாக, சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
இரு தரப்பும் தமது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, ஆலய வளாகத்துக்கு வெளியில் பிக்குவின் உடலைப் புதைப்பதற்கு ஆட்சேபனையுள்ளதா என பிள்ளையார் ஆலய நிர்வாகத்திடம் நீதிவான் கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் ஆலோசித்து பதிலளிக்குமாறு அவகாசம் வழங்கினார்.
சிறிய இடைவேளையின் பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ஆலய வளாகத்தில், சூழலில் பிக்குவின் உடலைப் புதைப்பதைத் தாம் எதிர்ப்பதாக ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடலை அடக்கம் செய்வற்கு உரிய இடங்களிலேயே அடக்கம் செய்வதே பொதுவிதி என்பதையும் சுட்டிக்காட்டி, உடலை அடக்கம் செய்ய சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யும்படி கோரினர்.
நீண்ட விசாரணையின் பின்னர் ஆலயத்துக்கு அப்பால் உள்ள இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.
எனினும், இந்த உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகாமையில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
குறித்த இடத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தவேளை பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வதற்கு ஞானசார தேரர் தலைமையிலான குழுவினருக்குப் பாதுகாப்பும் வழங்கினர். இது தமிழ் மக்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அவமதித்த ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு எதிராக சட்டத்தரணிகளும், தமிழ் மக்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Reviewed by Author
on
September 24, 2019
Rating:

No comments:
Post a Comment