தமிழில் பேசக் கூடாது என்று உத்தரவு போட்ட உணவகத்திற்கு ஏற்பட்ட நிலை! இணையவாசிகள் செய்த முயற்சி -
கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஸ் பகுதியிலுள்ள பிரபல உணவகமொன்றிலேயே இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
உணவகத்தின் இந்த செயற்பாடு தொடர்பில் கண்டனங்கள் எழுந்ததுடன் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
இது தொடர்பாக தங்கள் கருத்தினை வெளியிட்டிருந்த உணவகம்
“ எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இதை நாம் செய்தோம் . தமிழ் மொழியில் ஊழியர்கள் கதைக்கும் போது அது வாடிக்கையாளரை கிண்டல் செய்வது போல தாங்கள் உணர்வதாக கூறியுள்ளார்கள். இதனால் தான் இந்த அறிவிப்பை வைத்தோம் ” என்று விளக்கம் கொடுத்திருக்கிறது. எனினும் இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்திருந்த இணையவாசிகள், இனவாதம் வெளிப்படுத்தும் அந்த தனியார் உணவகத்தை நிராகரிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை சமூகவலைத்தளங்களில் பல சமூக ஆர்வலர்களால் முன்வைத்தனர்.
இந்நிலையில் சர்வதேச மட்டத்தில் உயர் பெறுபேறுகளைக்கொண்டிருந்த அந்த உணவகத்தின் நட்சத்திர நிலை திடீரென்று குறைவடைந்துள்ளது.
அந்த உணவகத்தில் தயாரிக்கப்படும்; உணவின் தரம், அந்த உணவகத்தில் காண்பிக்கப்படும் இனவாதம் போன்றன பற்றி இணையவாசிகள் மற்றும் அதனது வாடிக்கையாளர்கள் பதிவிட்டுவரும் எதிர்மறையான கருத்துக்களால், கூகிள், ரிப் அட்வைசர் உட்பட பல சர்வதேச தரவரிசைப்படுத்தல்களில் கீழ் மட்ட நிலைக்கு அந்த உணவகம் நிரல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை, தமிழ் நாடு, மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இனவாதத்திற்கு எதிரானவர்களின் அதிரடியான செயற்பாடுகளால், அந்த உணவகத்தின் நிர்வாகிகள் தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தற்பொழுது தள்ளப்பட்டிருக்கிறது.
இதுவொருபுறமிருக்க, டுவிட்டரில் இன்றைய ரென்டிங்கிலும் குறித்த உணவகத்தின் ஹேஷ் டாக் முதலிடத்திலிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ் மொழியை பேசக்கூடாது என உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழில் பேசக் கூடாது என்று உத்தரவு போட்ட உணவகத்திற்கு ஏற்பட்ட நிலை! இணையவாசிகள் செய்த முயற்சி -
Reviewed by Author
on
October 30, 2019
Rating:

No comments:
Post a Comment