எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள்! பாகிஸ்தான் அணித்தலைவர்
இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. அடுத்து டி-20 தொடர் நடக்கிறது. முதல் டி-20 போட்டி, லாகூரில் நேற்று நடந்தது.
இப்போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பரஸ் அகமது பேசுகையில், இலங்கை அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள்.
எங்கள் அணியின் பாபர் விரைவாக ஆட்டமிழந்துவிட்டார், இதுவே எங்களுக்கு அதிக நெருக்கடியை கொடுத்தது.
இலங்கை அணியிடம் எச்சரிக்கையாகவே இருந்தோம், ஆனால் அதையும் மீறி சிறப்பாக செயல்பட்டனர் என கூறியுள்ளார்.
எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள்! பாகிஸ்தான் அணித்தலைவர்
Reviewed by Author
on
October 06, 2019
Rating:

No comments:
Post a Comment