உலகிலேயே விலைமதிப்பில்லாத பழமையான 'இரத்தினக்கல்' கண்டுபிடிப்பு!
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் ஒரு தனித்துவமான 'ரத்தினத்திற்குள் ரத்தினம்' என அழைக்கப்படும் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
800 மில்லியன் ஆண்டுகள் பழமையான 'டூ இன் ஒன் நகை' விலைமதிப்பற்றது என்றும் உலகில் இதுபோன்ற ஒரே கண்டுபிடிப்பு என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யாவில் ஒன்றுக்குள் மற்றொன்று இருப்பதை போல பாரம்பரியமாக செய்யப்படும் பொம்மைகளை ஒத்திருப்பதால் இவற்றிற்கு 'மேட்ரியோஷ்கா' வைரம் என பெயரிடப்பட்டுள்ள.
பெரிய ரத்தினம் .62 காரட் எடையும், 4.8 x 4.9 x 2.8 மிமீ பரிமாணங்களைக் கொண்டது. அதன் உள்ளே சுதந்திரமாக நகரும் சிறிய கூடு வைரமானது .02 காரட் எடையும், 1.9 × 2.1 × 0.6 மிமீ பரிமாணமும் கொண்டுள்ளது.

எக்ஸ்ரேயில் தெரியும் இந்த கண்டுபிடிப்பு ரஷ்ய வைர நிறுவனமான அல்ரோசாவால் அறிவிக்கப்பட்டது. சாகா குடியரசில் உள்ள நியூர்பா வைர சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது யாகுட்டியா என்றும் அழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் அதிகாரி, இது உண்மையில் இயற்கையின் ஒரு தனித்துவமான படைப்பு. இதுபோன்ற வைரங்கள் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
மேலும், மேட்ரியோஷ்கா வைரத்தை மேலதிக பகுப்பாய்வுகளுக்காக அமெரிக்காவின் ஜெமலாஜிக்கல் நிறுவனத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே விலைமதிப்பில்லாத பழமையான 'இரத்தினக்கல்' கண்டுபிடிப்பு!
Reviewed by Author
on
October 06, 2019
Rating:
No comments:
Post a Comment