மன்னார் மாந்தை பகுதியில் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் கழுதையின் உடல் மீட்பு-
மன்னார்-யாழ் பிரதான வீதி,மாந்தை சந்தியில் உள்ள சேமக்காலைக்கு அருகில் நான்கு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் கழுதை ஒன்றின் உடல் இன்று திங்கட்கிழமை(4) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.
அப்பகுதியூடாக பயணித்த மக்கள் கழுதை ஒன்றின் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதை கண்ட நிலையில் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
-உடனடியாக நான் இன்று திங்கட்கிழமை(4) காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன்.
இதன் போது கழுதையின் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.
குறித்த கழுதை மாட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
-இவ்விடையம் தொடர்பாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம். கில்றோய் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் மேலும் தெரிவித்தார்.
அப்பகுதியூடாக பயணித்த மக்கள் கழுதை ஒன்றின் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதை கண்ட நிலையில் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
-உடனடியாக நான் இன்று திங்கட்கிழமை(4) காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டேன்.
இதன் போது கழுதையின் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது.
குறித்த கழுதை மாட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
-இவ்விடையம் தொடர்பாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம். கில்றோய் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாந்தை பகுதியில் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் கழுதையின் உடல் மீட்பு-
Reviewed by Author
on
November 04, 2019
Rating:
Reviewed by Author
on
November 04, 2019
Rating:

1 comment:
மிகவும் கவலைக்குரியதும் மன வேதனைக்குரிய
சம்பவமும் ஆகும். இச் செயலைச் செய்த, ஈன இரக்கமற்ற அந்த
மனித கரங்களுக்கு கடவுள் கட்டாயம் அதற்க்குரிய தண்டனையை கொடுத்தே
தீ௫வார் என்பதில் ஐயமில்லை.
Post a Comment