அண்மைய செய்திகள்

recent
-

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி


சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் போஸ்டின் கட்டுரையாளர் மற்றும் அல்-அரபு செய்தி சேனலின் பொது மேலாளர் மற்றும் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த, ஜமால் கஷோகி 2017ம் ஆண்டு சவுதியை விட்டு வெளியேறினார். அதன்பிறகு சவூதி அரசை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதி வந்தார்.

குறிப்பாக அவர் சவூதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், மன்னர் சல்மான் ஆகியோரைப் பெரிதும் விமர்சித்து வந்தார். மேலும், ஏமனில் சவூதி அரேபியாவின் தலையீட்டைக் கண்டித்து எழுதினார்.
2018ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதியன்று தனது முன்னாள் மனைவியின் விவாகரத்து சான்றிதழ் வாங்குவதற்காக துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்திற்கு சென்ற அவர், அதன்பிறகு அங்கிருந்து வெளியேறவில்லை.
அவர் காணாமல் போனதாக சவூதி தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சர்வதேச ஊடகங்கள் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கிளப்பின.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த துருக்கிய அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்த கொலைக்கு சவூதி இளவரசர் காரணம் எனவும், அவருடைய ரகசிய பாதுகாவலர்களால் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டார் எனவும் குற்றசாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த இளவரசர் பின் சல்மான், கடந்த செப்டம்பர் மாதம் கஷோகி கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால் கொலைக்கு தான் காரணமில்லை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்தார்.
இதற்கிடையில் சவூதி தூதரகத்திலிருந்து சில ரகசிய டேப்களுடம் அதிகாரிகளின் கைக்கு கிடைத்தது. அதனை வைத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில், 18 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் முடிவில், கஷோகி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டபின், அவரது உடல் துண்டுகளாக்கப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனையும், மூன்று பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக, ரியாத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "ஜமால் கஷோகி கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக 11 பேர் விசாரணைக்கு வந்தனர். அவர்களில் ஐந்து பேர் தூக்கிலிடப்படுவார்கள், மேலும் மூன்று பேர் 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்".
அதில், "இளவரசர் முகமதுவின் உயர் ஆலோசகராக இருந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட சவுத் அல்-கஹ்தானி விசாரிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை".
"உளவுத்துறை உயர் அதிகாரியான அஹ்மத் அலசிரி தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் நீதிமன்றத்தால் குற்றவாளி அல்ல என்று கண்டறியப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி Reviewed by Author on December 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.