இந்தியர்கள் என்னை விமர்சித்தனர்! வெளிநாட்டில் 20 வயதில் சாதித்து காட்டிய ஈழத்தமிழர் -
நார்வேயில் வசித்து வருபவர் Jeenu Mahadevan. 20 வயதான இவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர். ஈழத்தமிழரான இவர் தற்போது மொடல் உலகில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு மொடலாக இருந்து வருகிறார்.
குறிப்பாக இவர் Alexander McQueen, Fendi, Givenchy, Burberry, Versace போன்ற நிறுவனங்களுக்கு மொடலாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தான் எப்படி இந்த மொடல் உலகில் வந்தேன்? சந்தித்த விமர்சனங்கள் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நான் நார்வேயின் Oslo-வில் இருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தேன், அப்போது அதில் இருந்த பெண் ஒருவர் ஆரம்பத்தில் இருந்து என்னை பார்த்து கொண்டே இருந்தார்.
மூன்று நிறுத்தங்களை தாண்டியும் அவர் என்னை தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தார். எனக்கு அவர் ஏன் இப்படி பார்க்கிறார் என்று தெரியவில்லை.

அதன் பின் அவர் மொடல் ஆவது பற்றி கூறினார். நான் ஆரம்பத்தில் இதை ஒரு நகைச்சுவையாக கூறுகிறார் என்று நினைத்தேன், ஏனெனில் மொடலிற்கு வெள்ளையாக இருப்பவர்களை அதிகம் இதில் இருப்பர், ஆசியா மற்றும் கருப்பாக இருப்பவர்கள் சிலரை மட்டுமே இதில் பார்க்க முடியும்.
ஆனால் அவர் சொன்னது உண்மை என்று புரியவைத்தார். இதையடுத்து மொடலில் இறங்கினேன், அதன் படி ஐரோப்பாவின் சில பிரபல் நிறுவனங்களுக்கு மொடலாக இருந்தேன், இதனால் ஆரம்பத்தில் நிறைய கருத்துக்கள் வந்தன, அதில் பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்தன்.

குறிப்பாக இந்திய மக்கள் பலர் நான் வெள்ளையாக இல்லாமல், சற்று கருமையாக இருப்பதால், இந்த பேஷன் உலகிற்கு சரியில்லாதவன் என்று கூறி விமர்சித்தனர், கிண்டலடித்தனர். ஆனால் நான் அதை எல்லாம் தாண்டி கடுமையாக உழைத்தேன், சாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த பேஷன் உலகில் வரவில்லை என்றால் வேறு என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்ட போது, அவர் ஒருவேளை கம்ப்யூட்டர் இன்ஜினியர் அல்லது ஆஸ்டோ பிசிக்ஸில் இருந்திருப்பேன் என்று கூறி முடித்தார்.
ஆசியாவை சேர்ந்த பலரும் நாம் எல்லாம் எப்படி மொடல் ஆக முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் பலருக்கும், Jeenu Mahadevan ஒரு முன் உதாரணம் என்று கூறலாம்.
இந்தியர்கள் என்னை விமர்சித்தனர்! வெளிநாட்டில் 20 வயதில் சாதித்து காட்டிய ஈழத்தமிழர் -
Reviewed by Author
on
December 24, 2019
Rating:
No comments:
Post a Comment