தமிழ் பெண்ணின் கஷ்டத்தை பார்த்து பிரித்தானிய மாணவர் உருவாக்கிய சலவை இயந்திரம் -
பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த நாவ் சாவ்னி என்கிற மாணவர் பாத் பல்கலைக்கழகத்தில், மனிதாபிமானம், மோதல் மற்றும் மேம்பாடு என்கிற பிரிவில் பிஎஸ்சி படித்து வருகிறார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அப்பகுதியில் திவ்யா என்கிற பெண் மட்டுமே ஆங்கிலம் தெரிந்தவர் என்பதால், நாவ் சாவ்னி அவரிடம் மட்டுமே பேசி வந்துள்ளார்.

ஒருநாள் திவ்யா நீண்ட நேரம் கைகளால் துணிதுவைப்பதை பார்த்த நாவ் சாவ்னி, அதனால் வரும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார். அதற்கு திவயா, நாள்பட்ட முதுகு மற்றும் மூட்டு வலிக்கு வழிவகுக்கும் எனக்கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு வேதனையடைந்த நாவ் சாவ்னி, அவர்களுக்கு உதவ முடிவெடுத்துள்ளார். பிரித்தானிய திரும்பியதும் உடனடியாக, ஒரு சுழற்சிக்கு 10 கிலோ துணிகளைக் கழுவக்கூடிய ஒரு கையால் துவைக்கும் சலவை இயந்திரத்தை உருவாக்கினார்.

மேலும், அந்த இயந்திரத்திற்கு திவ்யாவின் பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தயாரித்த விலைகுறைவான 50 சலவை இயந்திரங்கள், இந்த வாரம் வடக்கு ஈராக்கில் உள்ள அகதி முகாமில் நிறுவப்பட உள்ளன. இதுகுறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், தங்களுடைய மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் பெண்ணின் கஷ்டத்தை பார்த்து பிரித்தானிய மாணவர் உருவாக்கிய சலவை இயந்திரம் -
Reviewed by Author
on
December 24, 2019
Rating:
No comments:
Post a Comment