தாய்ப்பாலூட்டும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க....குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்!
அதிலும் தாய்பால் ஊட்டும் பெண்கள் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும்.
ஏனெனில் சில உணவு வகைகள் குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தி விடுகின்றது.
இதனால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அந்தவகையில் தாய்ப்பாலூட்டும் போது தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம். தேநீர் உங்கள் உறக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருக்கும். எனவே நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவை படிப்படியாய் குறைத்து கொள்ளுங்கள்.
- காபியின் அளவை குறைத்திடுங்கள், முடிந்தவரை காபியை தவிர்த்திடுங்கள். இதில் இருக்கும் காபின் தாய்ப்பாலில் சேரும்போது இது குழந்தையின் சிறிய உடலால் செரிக்கவும் வெளியேற்றவும் முடியாததால், குழந்தையின் உடலிலேயே தங்கி விடும். இது ஓய்வில்லாமை, எரிச்சல் மற்றும் வாயு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும்.
- ப்ரோக்கோலி செரிக்க அதிகம் நேரம் எடுத்து கொள்ளும். இது செரிக்க நேரம் எடுத்துக் கொண்டால் உங்களுக்கும் குழந்தைக்கும் வாயு தொல்லையை ஏற்படுத்தி விடும்.
- செர்ரி பழங்களில் இயற்கையாகவே மெழுகு பொருள் இருக்கும். இது மலச்சிக்கலுடன் கூடிய வாயு தொல்லையை குழந்தைக்கு ஏற்படுத்தும்.
- வேர்க்கடலை இது சில குழந்தைகளுக்கு உணர்திறன் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும். இருப்பினும் இதில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் பாதிக்கு பாதி வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையும் செயல்படுவது சிறந்தது.
- மிளகுக்கீரையும் , வோக்கோசுவும் (ஒரு வகை கொத்தமல்லி) தாய்ப்பால் சுரப்பை குறைகின்றன. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போது இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பாலூட்டும் போது இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க....குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்!
Reviewed by Author
on
December 18, 2019
Rating:

No comments:
Post a Comment