முல்லைத்தீவு-விபத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவன் பலி!
முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் வண்டியில் பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.
இதன்போது உடையார்கட்டு, மூங்கிலாறு தெற்கு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் முகாமைத்துவ பீடத்தில் பேராதெனிய பல்கலை கழகத்துக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றைய தினமும் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகியிருந்த நிலையில் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு-விபத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவன் பலி!
Reviewed by Author
on
January 13, 2020
Rating:

No comments:
Post a Comment