இந்தியாவில் இருந்து நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ள இலங்கை அகதிகள் -
இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளில் மூவாயிரம்பேர் வரை இலங்கைக்கு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமது முதலாவது இந்திய பயணத்தை மேற்கொண்ட தினேஸ் குணவர்த்தன இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்து இது தொடர்பான விடயங்களை கலந்துரையாடினார்.
இந்தியாவில் தற்போது இலங்கை அகதிகள் சுமார் 80ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் தாயகம் திரும்பும் அகதிகளை ஏற்றுக்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டுள்ள இலங்கை அகதிகள் -
Reviewed by Author
on
January 13, 2020
Rating:

No comments:
Post a Comment