இலங்கையின் நான்கு மலைகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து -
பதுளை-ஹல்துமுல்ல -ருக்கத்தன மலை மற்றும் கஹட்டதலாவ ஆகிய மலைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4 ஏக்கர் காடு அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்களுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இதேவேளை, ஹந்தான மலையிலும் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்திற்கு மனிதர்களின் செயற்பாடுகளே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் நான்கு மலைகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்து -
Reviewed by Author
on
January 08, 2020
Rating:

No comments:
Post a Comment