மன்னாரில் கட்டாகாலி கால்நடைகளினால் விபத்துக்கள் அதிகரிப்பு-(VIDEO,PHOTOS)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக உரிமையாளர்கள் இல்லாத கால்நடை மற்றும் கட்டாக்காலி கழுதைகள், எருமை போன்ற விலங்குகளினால்; விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார்-யாழ்பாணம் பிரதான வீதி, மன்னார் வவுனியா பிரதான வீதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலி கால்நடைகள் பராமரிப்பு இன்றி நடமாடுவதனால் நாளுக்கு நாள் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்குள் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இரவு நேரங்களில் கடுமையான பனி பொழிகின்ற காரணத்தினால் விலங்குகள் கண்ணுக்கு தெரியாத காரணமாக அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எனவே கால்நடை உரிமையாளர்கள் குறித்த விலங்குகளுக்கு ஒழுங்கான முறையில் பராமரிக்குமாறும் அதே நேரத்தில் பிரதேச சபை மற்றும் நகரசபை குறித்த கட்டாக்காலி விலங்குகள் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by Author
on
February 03, 2020
Rating:

No comments:
Post a Comment