அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் தாக்க எதிரொலியால் சீனாவில் நேற்று ஆயிரக்கணக்கான திருமணங்கள் ரத்து.


சீனாவில் இந்த வருடம் February 2ம் திகதி நேற்று சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நாளாக சைனாவில் கருதப்படுகிறது. ஏனெனில் 02.02.2020 என்ற திகதியை பின்பக்கமாக வாசித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும்.
இதனால் இந்த அதிர்ஷ்ட நிறைந்த நாளில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்த சீன மக்கள் முன்னரே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது அங்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிவேகத்தில் பரவிவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக February 2ம் திகதி திருமணங்களை நடத்த வேண்டாம் என மக்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது.


இது குறித்து சைனா மக்கள் நலத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்:-February 2ம் திகதி அதிர்ஷ்ட நாள் என்று நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்து விடுங்கள். தற்போது நிலவும் சூழ்நிலையை மற்றவர்களுக்கு விவரியுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளின் படி சைனாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இது, அதிர்ஷ்ட நாளில் தங்களின் திருமணத்தை நடத்த வேண்டுமென திட்டமிட்டிருந்த மணமக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.

இதற்கிடையில் திருமணங்கள் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட சீனா அரசாங்கம், மரணச் சடங்கு நிகழ்ச்சிகளையும், விரைவாகவும், அதிக சனக் கூட்டம் இல்லாமலும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்க எதிரொலியால் சீனாவில் நேற்று ஆயிரக்கணக்கான திருமணங்கள் ரத்து. Reviewed by Author on February 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.