18 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்தது தலிபான் தீவிரவாதிகளுடன் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் -
கட்டார் தலைநகர் தோஹாவில் சனிக்கிழமை அமெரிக்க சிறப்பு தூதர் Zalmay Khalilzad மற்றும் தலிபான் அரசியல் தலைவர் முல்லா அப்துல் கானி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வைக் காண அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தோஹா சென்றிருந்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களுக்கான ஏவுதளமாக இருப்பதைத் தடுக்கும் தலிபான் கடமைகளுக்கு ஈடாக அமெரிக்கா ஆயிரக்கணக்கான துருப்புக்களை திரும்பப் பெறத் தொடங்கும்.
தலிபான்கள் குறித்த ஒப்பந்தம்படி செயல்பட்டால், அனைத்து அமெரிக்க துருப்புக்களும் அடுத்த 14 மாதங்களில் வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆண்டுகளாக ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆயுதமேந்திய மத அடிப்படைவாத இயக்கமாக தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கும் அமைப்பு தலிபான்கள்.
தலிபான் இயக்கம் 1994 ஆம் ஆண்டு காந்தஹார் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று பொருள்.
சுமார் 50 மாணவர்களுடன் முல்லா ஒமர் தலைமையில் இந்த இயக்கம் செயல்படத் தொடங்கியது.

சோவியத் போரின் கொடுமையாலும், உள்நாட்டுப் போரின் சித்திரவதைகளில் இருந்தும் தப்பித்து பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தங்கியிருந்த அகதிகள் இந்த இயக்கத்தில் இணையத் தொடங்கினர்.
தொடர்ந்து ஆப்கானிஸ்தானை கைப்பற்றும் நோக்கில் செயல்படத் தொடங்கியது, இதனையடுத்து ஆப்கான் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைக்கு ஆதரவாக அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கான் போருக்காக மட்டும் இந்த 18 ஆண்டுகளில் அமெரிக்கா சுமார் 750 பில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

18 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்தது தலிபான் தீவிரவாதிகளுடன் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் -
Reviewed by Author
on
March 01, 2020
Rating:
No comments:
Post a Comment