கொரோனா பயங்கரம்... பரிதவிக்கும் 56 நாடுகள்: முக்கிய பத்து தகவல்கள் -
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சவுதி அரேபியா விசா வழங்குவதில் சில வரையறைகளை வகுத்துள்ளது.
அதன்படி அந்நாட்டில் உள்ள புனித தலங்களான மெக்கா மதினாவை வழிப்பட வருபவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது.
மட்டுமின்றி, கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் விசா வழங்கப்படமாட்டாது என அந்நாடு அறிவித்துள்ளது.
எத்தனை காலம் இந்த தடை தொடரும், எப்போது தடை நீக்கப்படும் என்பதை அந்நாடு இன்னும் தெளிவாக விளக்கவில்லை.
- ஜூலையில் ஹஜ் யாத்திரை தொடங்கும் நிலையில் அப்போது வரை இந்த தடை நீடிக்குமா? அல்லது இடையில் விலக்கிக் கொள்ளப்படுமா என்பது குறித்து அந்நாடு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
- ஐஸ்லாந்து, நைஜீரியா, மெக்சிகோ, நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.
- ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டைமண்ட் ப்ரின்சஸ் சொகுசு கப்பலிலிருந்த பிரித்தானியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். அவர் உயிரிழந்துவிட்டதாகப் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
- கொரோனா வைரஸ் காரணமாகப் பங்குச் சந்தை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது. மேலும், பெரும் பணக்காரர்களுக்கு கடும் இழப்பையும் அளித்துள்ளது.
- கொரொனா வைரஸ் பாதிப்பானது சர்வதேச அளவில் மிகவும் மோசமான கட்டதை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
- ஈரானுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ கூறி உள்ளார். ஆனால், இந்த உதவிகளை ஈரான் நிராகரித்துள்ளது.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உண்மையில், வெற்றுப் புரளி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பொதுமக்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பயங்கரம்... பரிதவிக்கும் 56 நாடுகள்: முக்கிய பத்து தகவல்கள் -
Reviewed by Author
on
March 01, 2020
Rating:

No comments:
Post a Comment