மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்களுக்கு அவசர வேண்டுகோள்....
நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் மக்களில் யாராவது தனியாக அல்லது குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருந்தால் உடனடியாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு மக்களிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையினை நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் விடுத்துள்ளார்.
இவ் விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னும் சந்தேகத்தில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 5 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அதே போன்று மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேக்கம் கிராமத்தில் 6 குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களது வீட்டிலேயே அவர்களை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ளவர்களில் யாராவது யாழ்ப்பாணம் சென்று குறித்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தால், அல்லது கலந்து கொண்டவர்கள் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனடியாக நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
🖌நியூமன்னார் செய்திகள் www.newmannar.lk

Reviewed by Author
on
March 22, 2020
Rating:
Reviewed by Author
on
March 22, 2020
Rating:

No comments:
Post a Comment