வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்க ஆளுனர் நடவடிக்கை-செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.
வடமாகாணத்தில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக முழுமையாக பாதீக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு உற்பட்ட குடும்பங்களுக்கு எதிர் வரும் செவ்வாய்க்கிழமை உலர் உணவு பொருட்களை நேரடியாக சென்று வழங்க வடமாகாண ஆளுனர் பி.எச்.எம்.சாள்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
வடமாகாண மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண ஆளுனருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தொலைபேசியில் உரையாடினேன்.
இதன் போது தான் வடமாகாணத்தில் உள்ள அரசாங்க அதிபர்களுடன் மாவட்ட நிலவரம் தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக அன்றாடம் உழைக்கின்ற மக்களின் பிரச்சினைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
எதிர் வரும் செவ்வாய்க்கிழமை பாதீக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உற்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களை அவர்களுடைய இடங்களுக்கு கொண்டு சென்று வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
வட மாகாண ஆளுனரின் முயற்சி மகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் 24 மணி நேர சேவையாக தனது பணியை முன்னெடுத்து வருகின்றார்.
எனவே அரசாங்க அதிபர்களும் இவ்விடையத்தில் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.
சாமானிய மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
-எதிர் வரும் செவ்வாய்க்கிழமை(24) ஆளுனரின் பணிப்புரைக்கு அமைவாக வறுமைக் கோட்டிற்கு உற்பட்ட எமது மக்களுக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுவதாக ஆளுனர் தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
March 22, 2020
Rating:

No comments:
Post a Comment