இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரிப்பு -
இந்தத் தகவலை சுகாதார அமைச்சு இன்றிரவு 11 மணிக்கு அறிவித்துள்ளது.
அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 இலிருந்து 176 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதையடுத்து கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 138 நோயாளிகளும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது 259 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடைய மற்றும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு
இலங்கைக்குள் கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் மூன்றால் உயர்ந்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த தொகை 166 ஆக இருந்தது. இன்றைய தினத்தில் மாத்திரம் 8 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் முழுமையாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
இதேவேளை கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் இரண்டு பேர் பூரண குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு சென்றுள்ளதாக அரச தொற்றுநோய் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரிப்பு -
 Reviewed by Author
        on 
        
April 06, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 06, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 06, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 06, 2020
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment