அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்! -
கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் இலங்கை மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் உறுதியளித்துள்ளது.
இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
தற்காலிக விசா உட்பட்ட பல்வேறு விடங்களில் இலங்கை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 12 மாதங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள மாணவர்கள் தமது நிதித்தேவைகளுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள தமது மேலதிகாரியுடன் தொடர்புகொள்ளுமாறும் உயர்ஸ்தானிகர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்! -
 Reviewed by Author
        on 
        
April 06, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 06, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 06, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 06, 2020
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment