ஐ.நா மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டத் தொடரில் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள்! -
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் 43வது கூட்டத்தொடர் பெப்ரவரி 24ம் திகதிஆரம்பித்து மார்ச் 13ம் திகதி வரை இடம்பெற்றது.
ஆரம்பத்தில் மார்ச் 20ம் திகதி வரை வழமை போல இது நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டிருப்பினும் கொரோனா வைரசின் தொற்றைத் தவிர்க்க் மார்ச் 13ம்திகதி முதல் அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்த ஐ.நா மன்றம் ஆணையிட்டது.
மேலும்தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒழுங்கு செய்த அனைத்து பக்கறை நிகழ்வுகளும்செவ்வாய் மார்ச் 3ம் திகதியிலிருந்தே இரத்து செய்யப்பட்டன. எனவே தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 14 பக்கறை நிகழ்வுகளில் 1மாத்திரமே மார்ச் 2ம் திகதி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தொடரின் பொதுச்சூழலும் எதிர்பார்ப்புகளும்
30/1, 34/1 மற்றும் 40/ 1 தீர்மானங்கள் மூலம் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள்சபையினால் வழங்கப்பட்ட 2 வருடகால அவகாசம் ஒட்டு மொத்தமாக 6 வருடங்களாகநீடித்திருந்த போதிலும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறிதல் போன்ற விடயங்களில் சிறீலங்கா அரசு எவ்வித முன்னேற்றமும் காட்டவில்லை.
சிறீலங்காவின் தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்கே மேற்கத்தைய சமூகம் கால அவகாசநாடகம் நடத்தியிருந்த போதிலும் அவர்கள் கேட்ட குறைந்த பட்ச விதிமுறைகளைக் கூடபின்பற்றத் தவறியிருந்தது சிறீலங்கா அரசு.
மேலும் தங்களுக்குத் தேவையான ஆட்சிமாற்றத்தை நிகழ்த்தவே மேற்கத்தைய நாடுகள் நடந்தேறிய தமிழினப்படுகொலையை ஒருகருவியாக பயண்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.இவ்வாறான ஒரு கட்டத்திலேயே இக்கூட்டத்தொடரானது .
சிறீலங்காவினதும்அனைத்துலகத்தினதும் அடுத்த கட்ட நகர்வை எதிர்பார்த்து ஆரம்பித்திருந்தது.
இக்கூட்டத்தொடரில் தமிழீழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து 40இற்கும் அதிகமான தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
ஐ.நா. வின் விசேட பிரதிநிதிகளை செனீவாவிற்கு வரும் எமது தமிழ்செயற்பாட்டாளர்கள் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினை வழமை போல இம்முறையும்தமிழர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. எமது தமிழர் இயக்க செயற்பாட்டாளர்களோடு ஏனைய செயற்பாட்டாளர்களும் அதே சமயம் ஈழத்தில் இருந்து வருகை தந்தபாதிக்கப்பட்டவர்களும் சந்தித்தனர்.
தமிழர் இயக்கத்தின்பார்வை
இந்தச் சூழலில், சிறீலங்காவில் நடந்தது வெறும் போர் குற்றங்களோ அல்லதுமனிதகுலத்திறகெதிரான குற்றமோ அல்ல, மாறாக தமிழ்மக்களுக்கு எதிராக அவர்களைஅழித்தொழிக்கும் நீண்ட கால நோக்கோடு சிறீலங்கா சிங்களப் பௌத்த பேரினவாதஅரசினால் நடத்தப்பட்ட, நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டமைப்புசார்தமிழினவழிப்பு என்று தொடர்ந்தும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் அனைத்துக்கூட்டத்தொடர்களிலும் தமிழர் இயக்க அமைப்பினூடாக மாத்திரமே இடித்துரைக்கப்பட்டுவருகின்றது.
அதாவது பிரதான அவையிலும், பக்கறை நிகழ்வுகளிலும், எழுத்துமூலஅறிக்கைகளினூடாகவும், வாய்மூல அறிக்கைகளினூடாகவும் சிறீலங்காவின் உள்ளக விசாரணைகளில் தமிழருக்கு எவ்வித நீதியும் கிடைக்காது என்றும் அனைத்துலகவிசாரணையே தேவை என்றும் தொடர்ந்து ஐ.நா வில் சுட்டிக்காட்டி வருகின்றது.
தமிழர் இயக்த்தின் ஊடாக 118 இணை அமைப்புகளோடு 3000கும் மேற்பட்ட பல அனைத்துலகஅமைப்புகளின் இணை அனுசரணையோடு ஐ.நா விற்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்டஅறிக்கையையடுத்தே, கடந்த 42வது மார்ச் கூட்டத்தொடரில் ஐ.நா வின் உயர்ஸ்தானிகர்தனது அறிக்கையிலே தமிழ் அமைப்புகள் இவ்வாறு தொடர்ந்தும் தமிழருக்கானநீதியைக்கேட்டு ஐ.நா வில் குரல் எழுப்பி வருவதை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதுவே தமிழர் இயக்கத்தின் நீண்ட காலச்செயற்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.தொடர்ந்தும் இவ்வாறாக தமிழினவழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா வில் வாய்மூலஅறிக்கைகளும், எழுத்துமூல அறிக்கைகளும், பக்கறை நிகழ்வுகளும் பெரிதளவுநிகழ்த்தப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லாது நாம் பயணிக்க வேண்டிய நீண்டகாலத்தேவையை உணர்ந்து தமிழர் இயக்கம் இக்கூட்டத்தொடரிலும் செயற்பட்டது.
அதன் அடிப்படைலில், இம்முறை 60கும் மேற்பட்ட தமிழின செயற்பாட்டாளர்களை 43வதுகூட்டத்தொடருக்கு யெனீவாவிற்லு வரவேற்க காத்திருந்த போதிலும் சுவிசின்தூதரகங்கள் தொடர்ந்தும் தமிழ் செயற்பாட்டார்களுக்கு விசா அனுமதியை நிராகரித்துஇருந்தது.
மேலும் சிறீலங்காவில் கோத்தபாய அசரினால் மேற்கொள்ளப்படும் கடும்போக்கு கொள்கையினால் அச்சம் காரணமாக பல தமிழ் செயற்பாட்டாளர்கள் ஈழத்திலிருந்துவருகை தருவதை தவிர்த்துக் கொண்டனர்.
புலத்தின் செயற்பாட்டாளர்களும் அதனையேகாரணம் காட்டி ஈழத்தில் வாழ்கின்ற தங்களது உறவுகளுக்கு உயிரச்சுறுத்தல் வரும் என்று இக்கூட்டத்தொடரில் கலந்து கொள்வதனைத் தவிர்நதிருந்தார்கள்.
அதனையும் மீறி துணிச்சலாக ஈழம், தமிழகம், பிரான்சு, சுவிசர்லாந்து, இங்கிலாந்து,மலேசியா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்துதமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டத் தொடரில் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகள்! -
Reviewed by Author
on
April 13, 2020
Rating:

No comments:
Post a Comment