புத்தளம் மீனவர்கள் முல்லைத்தீவில்! கொரோனா அச்சத்தில் மக்கள் -
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மக்களை அச்சுறுத்தும் வகையிலான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்ட சமூகவியல் செயற்பாட்டாளர் விஜயகுமார் நவநீதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் புத்தளம் மாவட்டத்திலிருந்து எட்டு சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவின் கொக்கிளாய் பகுதிக்கு நேற்று இரவு விஜயம் செய்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் கூடுகின்ற இடத்தில் அவர்களோடு இணைந்து இவர்களும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் மீனவர்கள் முல்லைத்தீவில்! கொரோனா அச்சத்தில் மக்கள் -
Reviewed by Author
on
April 13, 2020
Rating:

No comments:
Post a Comment