68 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி! ஆச்சரிய தகவல்
நைஜீரியாவை சேர்ந்த தம்பதி Noah Adenuga(77)-Margaret Adenuga(68). இவர்கள் இருவருக்கும் கடந்த 1974-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் IVF(கருத்தரிப்பு) முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த முயற்சி மூன்று முறை தோல்வியடைந்த நிலையில், அந்த தம்பதி இறுதியாக இப்போது இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
அதில் ஒரு குழந்தை ஆண் மற்றும் ஒரு குழந்தை பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவரான Noah Adenuga கூறுகையில், IVF முயற்சிகள் தோல்விகள் கண்ட போதிலும், நாங்கள் நம்பிக்கையை ஒரு போதும் கைவிட வில்லை. நாம் ஒரு குறிப்பிட்ட கனவு காணும் போது, அந்த கனவு நிறைவேறும் என்று நம்ப வேண்டும், அப்படி நம்பினால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை Lagos-ல் இருக்கும் Lagos University Teaching மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. 37 வாரங்களுக்கு பின் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை பிரசவித்த மருத்துவர் Adeyemi Okunowo கூறுகையில், இவரின் வயதின் காரணமாக, அவருடைய கர்ப்பத்தை கண்காணிக்க மருத்துவமனையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.
ஒரு வயதான பெண், குறிப்பாக முதல் முறையாக தாயாகும் போது அது ஆபத்துள்ள கர்ப்பம் என்றே கூறலாம். இதில், அவருக்கு இரட்டை குழந்தை பிறக்க போகிறார்கள் என்பதை அறிய முடிந்ததால், அவரின் கர்ப்பத்தை எங்களால் நிர்வகிக்க முடிந்தது.
IVF மூலம் வயதான பெண்கள் கருத்தரிக்க முடிந்தாலும், அந்த வயதில் கர்ப்பமாக இருப்பதால் ஏற்படும் மருத்துவ அபாயங்களை மருத்துவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அந்த வயதில் கர்ப்பமாக இருப்பதால் குழந்தை முன்கூட்டியே பிறப்பது போன்ற மருத்துவ சிக்கல்கள் உள்ளன. அந்த வகையில் இவர் அதிர்ஷ்டசாலி, ஆனால் பலர் குழந்தையைப் பெற்றபின் பிற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, 73 வயதான இந்தியப் பெண் ஒருவர் IVF மூலம் கருத்தரித்தபின் இரட்டைப் பெண்களைப் பாதுகாப்பாக பிரசவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
68 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி! ஆச்சரிய தகவல்
Reviewed by Author
on
April 25, 2020
Rating:
No comments:
Post a Comment