வெசாக் நிகழ்வுகளை வீட்டிலிருந்தே அனுஸ்டிக்குமாறு அரசாங்கம் பணிப்புரை -
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் நாட்டின் முக்கிய பௌத்த தலைவர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது வெசாக் கொண்டாட்டங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெசாக் பௌர்ணமி நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
வழமையாக வெசாக் நிகழ்வுகள் அதிகளவான மக்களின் பங்களிப்புடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை வெசாக் நிகழ்வுகள் இலத்திரனியல் ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் எனவும் பொது நிகழ்வுகள் நடத்தப்படாது எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெசாக் நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட காரணத்தினால் கடந்த ஆண்டும் வெசாக் நிகழ்வுகள் வழமை போன்று நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெசாக் நிகழ்வுகளை வீட்டிலிருந்தே அனுஸ்டிக்குமாறு அரசாங்கம் பணிப்புரை -
Reviewed by Author
on
April 25, 2020
Rating:

No comments:
Post a Comment