கொரோனா பரவியும் இதுவரை உயிரிழப்பை சந்திக்காத நாடுகள்..
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தொட்டுள்ளதுடன் மரணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளன.
எனினும் வைரஸ் பாதிப்பில் இருந்து சில நாடுகள் தப்பியுள்ளன.
பெரும்பாலும் தனித்தனி தீவுகளாக உள்ள அந்த நாடுகளில் வைரஸ் பரவி இருந்தாலும் இதுவரை எந்த உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை.
கொரோனா பரவி இருந்தாலும் உயிரிழப்புக்களை சந்திக்காத நாடுகள், தீவுகள் 49 என உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளப்படுத்தியுள்ளது.
அவற்றில் வியட்நாம், கயானா, கம்போடியா, ருவண்டா, மடகஸ்கார், பிரெஞ்சு கயானா, உகாண்டா, நேபாளம் ஆகிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.
கொரோனா பரவியும் இதுவரை உயிரிழப்பை சந்திக்காத நாடுகள்..
Reviewed by Author
on
April 13, 2020
Rating:

No comments:
Post a Comment