காலி மைதானத்தில் விளையாட தயார்! ஐபிஎல் குறித்து ஹர்பஜன் சிங் -
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 ஆம் திகதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஏப்ரல் 15 ஆம் திகதி போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மார்ச் 25 ஆம் திகதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் உடனடியாக ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் ஹர்பஜன் சிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் " ரசிகர்களின் உடல்நலன் மிகவும் முக்கியம், போட்டி நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டால், காலி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்களை விளையாடத் தயார். அப்படி விளையாடும்போது மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவு விளையாடும்போது கிடைக்காது தான். ஆனால் காலி மைதானத்தில் ஐபிஎல் நடைபெற்றால் குறைந்தபட்சம் அவர்கள் தொலைக்காட்சியிலாவது ஆட்டங்களை ரசிப்பார்கள்.
மேலும் வீரர்களின் நலனில் நாம் அக்கறை செலுத்தவேண்டும். கிரிக்கெட் மைதானம், வீரர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்தும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு பின்பு சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு முற்றிலும் சீரானதும் ஐபிஎல் போட்டி நடத்தப்பட வேண்டும்” என்றார்.
காலி மைதானத்தில் விளையாட தயார்! ஐபிஎல் குறித்து ஹர்பஜன் சிங் -
Reviewed by Author
on
April 09, 2020
Rating:
Reviewed by Author
on
April 09, 2020
Rating:


No comments:
Post a Comment