யாழிலிருக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஏனைய மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி -
குறித்த கூட்டத்தின் போது தற்போதைய நிலைமைகள், சகல துறை சார் விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
கொடையாளர்களால் வழங்கப்பட்ட உணவுப் பொதியை அரசாங்க அதிபர் அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமாறு பணித்ததாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து நிரூபிக்கப்பட்டால் உரிய விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து யாழ். மாவட்டத்தில் தங்கி உள்ளவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நான்கு மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு உரிய முறையில் அனுமதிகளை பெற்று இன்று காலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழிலிருக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஏனைய மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி -
Reviewed by Author
on
April 22, 2020
Rating:

No comments:
Post a Comment