கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மனிதரை தாக்க கூடும்! பேராசிரியர் Sarah Gilbert தகவல் -
பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் உலகின் முக்கிய நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கு தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் என பேராசிரியர் Sarah Gilbert குறிப்பிட்டுள்ளார்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பேராசிரியர் Sarah Gilbert கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் மனிதரை தாக்க கூடும்! பேராசிரியர் Sarah Gilbert தகவல் -
Reviewed by Author
on
April 22, 2020
Rating:

No comments:
Post a Comment