மன்னார் பிரதேச செயலகம்,இராணுவம்,பொலிஸ் இணைந்து நடவடிக்கை......படம்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் நேற்று புதன் கிழமை(8) அதிகாலை முதல் எதிர் வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள மன்னார் பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் வியாபார நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
காவல்துறை ஊரடங்குச்சட்டம் மன்னார் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை 09-04-2020 காலை தளர்த்திக்கொள்ளப்பட்ட போதும் தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கப்பட்டது.
குறித்த கிராமத்தில் உள்ளவர்கள் வெளியே செல்லவும்,வெளியில் இருந்து தாராபுரம் கிராமத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளை சேர்ந்த 464 குடும்பங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கிராம மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், மன்னார் பிரதேச செயலகம்,சுகாதார துறை அதிகாரிகள்,பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடமாடும் வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள்,மரக்கறி வகைகள், மீன், குடி நீர் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
குறித்த மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை வழங்க மன்னார் பிரதேச செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த கிராமம் எதிர் வரும் 15 ஆம் திகதி வரை முழுமையாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
April 09, 2020
Rating:
Reviewed by Author
on
April 09, 2020
Rating:

No comments:
Post a Comment