மன்னார் மாவட்டத்தில் தாராபுரம் கிராமத்தை தவிர ஏனைய கிராமங்களில் காவல்துறை ஊரடங்குச்சட்டம் தளர்வு....படங்கள்
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை 09-04-2020 காலை காவல் துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்ட போதும் தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச் சடங்கு ஒன்றிற்கு புத்தளத்தில் இருந்து வருகை தந்து கலந்து கொண்ட நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் நோற்றைய தினம் புதன் கிழமை அதிகாலை முதல் தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கப்பட்டது.
எதிர் வரும் 15 ஆம் திகதி வரை தாராபுரம் கிராமம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இன்றைய தினம் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய மன்னார் நகர பகுதிக்குள் அதிகம் வருகை தந்தனர்.
எனினும் மரக்கறி வைகள் உற்பட அத்தியாவசிய பொருட்களை ஒரு சிலர் நியாயமான விலைக்கு விற்பனை செய்துள்ள போதும் பலர் அதிகூடிய விலைக்கே பொருட்களை விற்பனை செய்தனர்.
-மேலும் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வியாபார நடவடிக்கைகளை மன்னார் நகர சபை மட்டுப்படுத்தியுள்ளதோடு, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூரில் மேற்கொள்ளப்பட்டு வரும், மரக்கறி வகைகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
April 09, 2020
Rating:
Reviewed by Author
on
April 09, 2020
Rating:

No comments:
Post a Comment