கொரோனா கட்டுபாட்டு சமயங்களின் போது சேவைபெறும் பொது மக்களுக்கு விசேட ஏற்பாடுகள்
மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் ஊரடங்கு காலப்பகுதியிலும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியிலும் தங்களுடைய அடிப்படை தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்வதற்காக மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் நகர் பிரதேச செயலாளர் திரு.ம.பிரதீப் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இதுவரை மன்னார் பிரதேச செயலக பகுதிக்கு உட்பட்ட சமுர்த்தி உதவி பெறும் பயனாலிகள் 9445 பேருக்கு இதுவரை 5000 ரூபா கடன் உதவியானது பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் சமூர்த்தி உதவி பெறாத 2197 அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு என பிரதேச செயலகத்தின் ஊடாக 5000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் முதியோர்களுக்கு என விசேடமாக 1323 பேருக்கும் மாற்றுத்திறனாளிகள் 543 பேருக்கும் சிறுநீரக பாதிப்பு மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் உள்ள 56 நபர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவுகள் அவர்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்கள் ஊரடங்கு காலப்பகுதியில் பொருட்களை வீடுகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு என 11 நபர்களுக்கும் மரக்கறி விற்பனைக்கு என 10 நபர்களுக்கும் குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக 5 நபர்களுக்கும் அதே நேரத்தில் பேக்கறி மூன்றுக்கும் மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதற்காக மூன்று பேருக்கும் பிரதேச செயலகத்தின் ஊடாக பொலிசாரால் அனுமதிக்கப்பட்ட பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடமாடும் சேவையில் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பெற்ற வியாபாரிகள் விற்பனை செய்யும் பொருள் குறித்தும் விற்கும் விலை குறித்தும் மேற்பார்வை செய்வதற்கு என கண்கானிப்பு உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் தண்ணார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும் 2057 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இணங்கானப்பட்ட உணவு தட்டுப்பாடுடைய குடும்பங்களுக்கு விசேட பரிந்துரையின் அடிபடையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் மன்னார் பிரதேச செயலகத்தின் கீழ் வழங்கப்படும் சமூர்த்தி கொடுப்பனவு ஏனைய கொடுப்பனவுகள் அதேபோன்று பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் நிவாரணங்கள் தொடர்பாக எதேனும் விபரங்கள் தேவைபடும் பட்சத்திலோ அல்லது முறைப்பாடுகள் இருபின் 0232222238 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் அறிந்து கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் வீடுகளில் இருந்தவாரே சேவைகளை பெறுவதற்கான ஏற்பாடுகளை பயன்படுத்தி கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பிரதேச செயலகத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
April 14, 2020
Rating:

No comments:
Post a Comment