நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் நானாட்டான் பொது
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து நானாட்டான் பிரதேசச்
செயலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை(29) காலை இரத்ததான முகம் இடம் பெறவுள்ளதாக
நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார்
தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,
நானாட்டான்
பிரதேசச் செயலகம் மற்றும் நானாட்டான் பொது சுகாதார வைத்திய அதிகாரி
பணிமனையும் இணைந்து சுமார் நூறு பேரை இணைத்து நாளை வெள்ளிக்கிழமை காலை
நானாட்டான் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது.
குறித்த இரத்ததான முகாமில் இளைஞர்கள்,யுவதிகள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முடியும்.
குறிப்பாக
கிராம அலுவலகர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் உற்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நானாட்டான்
பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அனுசரனையில் குறித்த இரத்ததான முகாம்
இடம் பெற உள்ளது என நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர்
சிறீஸ்கந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் நாளை காலை இடம் பெற உள்ள இரத்ததான முகாம்...
Reviewed by Author
on
May 28, 2020
Rating:

No comments:
Post a Comment