அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை சற்று வழமைக்கு திரும்பியுள்ளது-PHOTOS


மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை(11) காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்ததிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் இயல்பு நிலை சற்று  வழமைக்கு திரும்பியுள்ளது. 

 குறிப்பாக மக்கள் சுகாதார முறைப்படி முகக்கவசம் அணிந்து மன்னார் நகர் பகுதிக்கு வருகை தந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தினுள் உள்ளூர் சேவைகளை அரச,தனியார் போக்குவரத்தச் சேவைகள் இடம் பெற்று வருகின்றது. அரச தனியார் அலுவலகங்கள் இன்றைய தினம் செயற்பட ஆரம்பித்துள்ள போதும் அலுவலகர்கள் சென்று வருகின்றனர்.

மன்னார் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளும் ஆரம்பித்துள்ளது. மன்னார் நகரில் பொலிஸாரும்,இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று தமக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்துள்ளனர்.






மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை சற்று வழமைக்கு திரும்பியுள்ளது-PHOTOS Reviewed by Author on May 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.